ADDED : ஆக 31, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி, டெலிபோன் நகர், 11வது குறுக்குத் தெருவில் மழைநீர் கால்வாயின் ‘மேன்ஹோல்’ எனும் இயந்திர நுழைவாயில் மூடிகள் ஐந்து, நான்கு வடிகால் தொட்டிகளின் வடிகட்டிகளும் மாயமாகியுள்ளன. இதனால், குடியிருப்பு வாசிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வடிகட்டிகள் இல்லாததால் மண் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் சாலையில் தேங்கி, வாகன நெரிசல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதை கவனித்து, மூடிகள் மற்றும் வடிகட்டிகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– பெருமாள்,
பெருங்குடி.
