/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி கோவில் பதாகையில் ரூ.10 கோடியில் வடிகால் பணி
/
ஆவடி கோவில் பதாகையில் ரூ.10 கோடியில் வடிகால் பணி
ADDED : பிப் 19, 2024 01:19 AM

ஆவடி:ஆவடி கோவில் பதாகை பிரதான சாலை மற்றும் அதன் சுற்று பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில், கடந்தாண்டு ஆவடி எச்.வி.எப்., சாலை 'ஆர்ச்' முதல் கோவில்பதாகை வரை 3,200 மீ., துாரத்திற்கு, 11.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீர் வடிகால் அமைத்தனர்.
இந்நிலையில், கோவில் பதாகை முதல் கன்னடபாளையம் வரை, மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் கிடப்பில் இருந்தது.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் கோவில் பதாகை ஏரி நிரம்பி வழிந்து, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், கோவில் பதாகை ஏரி அருகே உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வெள்ளப்பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண, 3 மீ., அளவில் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது.
அதன்படி, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவில் பதாகை முதல் கன்னடபாளையம் வரை, 2,300 மீ., துாரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, சில தினங்களுக்கு முன் துவங்கியுள்ளனர்.
ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த பணி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

