/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பங்களை அகற்றாததால் வடிகால்வாய் பணியில் தொய்வு
/
மின் கம்பங்களை அகற்றாததால் வடிகால்வாய் பணியில் தொய்வு
மின் கம்பங்களை அகற்றாததால் வடிகால்வாய் பணியில் தொய்வு
மின் கம்பங்களை அகற்றாததால் வடிகால்வாய் பணியில் தொய்வு
ADDED : செப் 11, 2025 02:26 AM

ராமாபுரம், மின் கம்பங்களை மாற்றி அமைக்காததால், ராமாபுரத்தில் மழைநீர் வடிகால்வாய் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வளசரவாக்கம், ராமாபுரம், பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளை இணைப்பது, ராமாபுரத்தில் உள்ள திருவள்ளுவர் சாலை.
இச்சாலையில், 8 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு கி.மீட்டருக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 600 மீட்டருக்கு வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களை மாற்றி அமைக்காததால், அப்பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வடிகால்வாய் பணி இடைவெளியுடன் இருக்கிறது.
பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, கால்வாய் நடுவே வரும் மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.