தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடிகால் பணி பாதியில் நிறுத்தம்: சாலை சகதியானதால் மக்கள் அவதி

வடிகால் பணி பாதியில் நிறுத்தம்: சாலை சகதியானதால் மக்கள் அவதி

வடிகால் பணி பாதியில் நிறுத்தம்: சாலை சகதியானதால் மக்கள் அவதி


UPDATED : ஆக 12, 2026 11:03 PM

ADDED : ஆக 12, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 11:03 PM ADDED : ஆக 12, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி: அடையாறு மண்டலம், வேளச்சேரி, கல்கி நகர் மூன்றாவது தெரு, 20 அடி அகலம் உடையது. இந்த தெருவில், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடந்து வந்தது.

இரு மாதங்களாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், 400 மீட்டர் துாரத்தில் வேளச்சேரி 100 அடி சாலைக்கு சென்று வந்த அப்பகுதிமக்கள், தற்போது 2 கி.மீ., துாரத்திற்கு சுற்றிச்செல்லும் அவலம் உள்ளது.

தவிர, வடிகாலுக்கா பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை முறையாக அகற்றாததால், சாலை முழுதும் பரவி உள்ளது. அவ்வப்போது பெய்துவரும் மழையால், சகதியாக சாலையாக மாறி, வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து அடிபடும் நிலை உள்ளது.

குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ - மாணவியர், முதியோர் சாலையில் நடந்து செல்லும்போது தடுமாறி விழுகின்றனர்.

பகுதிமக்கள் கூறுகையில், 'கல்கி நகர், இதர பகுதிகளைவிட தாழ்வானது. சாதாரண மழை பெய்தாலே பல மணி நேரத்திற்கு வெள்ளம் தேங்கி நிற்கும். அதனால், பருவமழைக்கு முன், இப்பிரச்னையில் அதிகாரிகள் தலையிட்டு, வடிகால் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us