/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள குழாய் உடைப்பு பம்மலில் குடிநீர் வீண்
/
பாதாள குழாய் உடைப்பு பம்மலில் குடிநீர் வீண்
ADDED : அக் 27, 2024 12:15 AM

பம்மல் தாம்பரம் மாநகராட்சி, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் பம்மல், சங்கர் நகர், வ.உ.சி., நகர், பிரகலாதன் தெருவில், பாதாள சாக்கடை குழாயை இணைக்க, பள்ளம் தோண்டியபோது, அவ்வழியாக செல்லும் குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர்.
அதை அப்படியே மறைத்து, பள்ளத்தை முறையாக மூடாமல் மண் கொட்டி சென்றுவிட்டனர்.
இந்நிலையில், இப்பகுதிக்கான தண்ணீரை நேற்று காலை திறந்தபோது, குழாய் உடைக்கப்பட்ட இடத்தில் அதிகளவில் குடிநீர் வெளியேறி, வெள்ளம்போல் சாலையில் ஓடியது. கழிவுநீர் கால்வாயில் கலந்து, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.
மேலும், திடீரென தண்ணீர் வெளியேறியதால், பள்ளம் தோண்டி முறையாக மூடாத இடத்தில் சாலை உள்வாங்கி, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பாதாள சாக்கடை திட்டப் பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது, மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.