/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆமைவேக குடிநீர் வாரிய பணி மேயர் வார்டில் குடிநீருக்கு அவதி
/
ஆமைவேக குடிநீர் வாரிய பணி மேயர் வார்டில் குடிநீருக்கு அவதி
ஆமைவேக குடிநீர் வாரிய பணி மேயர் வார்டில் குடிநீருக்கு அவதி
ஆமைவேக குடிநீர் வாரிய பணி மேயர் வார்டில் குடிநீருக்கு அவதி
ADDED : ஜூன் 27, 2025 12:15 AM

பெரம்பூர், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிப்பு பணிகள், கடந்த நான்கு மாதங்களாக நடக்கின்றன.
சென்னை மேயர் பிரியா கவுன்சிலராக உள்ள 74வது வார்டு மற்றும் 71வது வார்டில் புதுவாழைமா நகரில் குழாய் பதிப்பு பணிகள் முடிந்த நிலையில், பலரது வீடுகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.
இதையடுத்து, கழிவுநீர் கலப்பதை ஆய்வு செய்யும் வகையில், தற்போது ஆங்காங்கே பள்ளம் தோண்டி பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 71வது வார்டில் ைஹதர்கார்டன் தெரு பகுதிகளிலும், குழாய் பதிப்பு பணி நடந்து வருகிறது.
இப்பணிகளால், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, மேயர் வார்டில் குடிநீர் வினியோகமின்றி மக்கள் தவிக்கின்றனர்.
மேயர் வார்டில், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட வீடுகளில், 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இங்குள்ள சில வீடுகளில், ஆழ்துளை குழாய் இருப்பதால் அவர்கள் சமாளிக்கும் நிலையில், மற்றவர்கள் ஒரு கிலோ மீட்டர் தாண்டி, ஓட்டேரியில் குடிநீர் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து பகுதிமக்கள் கூறுகையில், ''வடசென்னை வளர்ச்சி திட்டம் என்பதே மக்களை வஞ்சிக்கும் திட்டமாகிவிட்டது. மழைநீர் வடிகால்வாய் பணிகளில் தோல்வி தான் மிஞ்சியது. தற்போது, குடிநீர் குழாய் பதிப்பு பணியிலும் தோல்வியே ஏற்பட்டுள்ளது.
''குடிநீர் வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும், பணிகளை விரைந்து முடிக்காமல் ஆமை வேகத்தில் பணிகளை செய்கின்றனர். மேயர் வார்டிலேயே இந்த நிலை என்றால் என்ன சொல்வது,'' என்றனர்.