தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிநீர் முன்பதிவு: வாரியம் விளக்கம்

 குடிநீர் முன்பதிவு: வாரியம் விளக்கம்

 குடிநீர் முன்பதிவு: வாரியம் விளக்கம்


ADDED : ஜன 09, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேவையான அளவு லாரி குடிநீர் முன்பதிவு செய்ய, ஆன்லைனில் எந்தவித குழப்பமும் இல்லை என, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில், சிறு குடியிருப்புகளுக்கு, 6,000 மற்றும் 9,000 லிட்டர் லாரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்ற நுகர்வோரின் புகார் குறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது.

இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் அளித்த விளக்கம்:

 தேவையின் அடிப்படையில், 6,000 மற்றும் 9,000 லிட்டர் குடிநீரை, ஆன்லைனில் பதிவு செய்ய எந்தவித இடையூறும் இல்லை

 தரைதளத்துடன் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், வாகன நிறுத்தத்துடன், 3 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஒரே முகவரியில் 6 குடியிருப்புகளுக்கு, 6,000 மற்றும் 9,000 லிட்டர் குடிநீர் முன்பதிவு செய்து கொள்ளலாம்

 தரை தளத்துடன் 3 அடுக்கு மற்றும் அதற்கு மேல் உள்ள குடியிருப்புகள், வாகன நிறுத்தத்துடன் கூடிய 4 மாடி குடியிருப்புகள், 9,000, 12,000 மற்றும் 18,000 லிட்டர் குடிநீர் பெற்று கொள்ள லாம்

 ஆன்லைனில், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் முன்பதிவு செய்து வந்ததை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை என, குறைக்கப் பட்டுள்ளது

 ஆன்லை ன் முன் பதிவில் குழப்பம் ஏதும் இல்லை. எந்த நாளில் குடிநீர் வேண்டும் என்ற விருப்பத்தையும், பொதுமக்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us