UPDATED : அக் 14, 2026 05:47 PM
ADDED : அக் 14, 2026 05:16 PM

அ நிறம் | அளவு
சென்னை: கோடம்பாக்கம் மண்டலம், 133வது வார்டு, தி.நகர் பகுதியில் பல வீடுகளுக்கு, சீரான குடிநீர் விநியோகம் இல்லை என, குடிநீர் வாரியத்திற்கு தொடர்ந்து புகார் சென்றது.
அப்பகுதியில், வாரியம் நியமித்துள்ள சிறப்பு கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில், ராஜபிள்ளை தோட்டம் பகுதியில் 29 வீடுகளில் மோட்டார் பொருத்தி, சட்ட விரோதமாக குடிநீர் திருடுவது தெரிந்தது.
அந்த வீடுகளில் இருந்து 29 மோட்டார்களை, நேற்று பறிமுதல் செய்த குழுவினர், உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
