தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய ஓட்டுநர் கைது

 தாம்பரம் சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய ஓட்டுநர் கைது

 தாம்பரம் சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய ஓட்டுநர் கைது


ADDED : பிப் 17, 2026 06:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்: தாம்பரம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் செல்வகுமார், 56. நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் பேருந்து நிலைய உதவி மையத்தில் பணியில் இருந்தார்.

அப்போது, போதையில் வந்த நபர், தன் மொபைல் போனை ஒருவர் திருடி சென்றதாகவும், அந்த எண்ணிற்கு, உங்கள் மொபைலில் இருந்து போன் செய்யுமாறும் கேட்டு வம்பு செய்துள்ளார்.

பின் அந்த நபர், சிறப்பு எஸ்.ஐ., செல்வகுமாரை சரமாரி தாக்கினார். அங்கிருந்தோர், போதையில் இருந்த நபரை பிடித்து, தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தினேஷ், 35, என்பதும், ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம், ஒரு பெண்ணுடன் தாம்பரத்திற்கு வந்துள்ளார். தினேஷ் போதையில் இருந்ததால், அந்த பெண், அவரது மொபைல் போனை எடுத்து சென்றது தெரியவந்தது. எஸ்.ஐ.,யை தாக்கிய தினேஷை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us