/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் ஷோரூம் கிடங்கில் 'ஏசி, பிரிஜ்' திருடிய டிரைவர் கைது
/
தனியார் ஷோரூம் கிடங்கில் 'ஏசி, பிரிஜ்' திருடிய டிரைவர் கைது
தனியார் ஷோரூம் கிடங்கில் 'ஏசி, பிரிஜ்' திருடிய டிரைவர் கைது
தனியார் ஷோரூம் கிடங்கில் 'ஏசி, பிரிஜ்' திருடிய டிரைவர் கைது
ADDED : மே 20, 2025 01:30 AM
குன்றத்துார்,
இருங்காட்டுக்கோட்டை அருகே காட்டரம்பாக்கம் பகுதியில், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும், பிரபல ஷோரூமின் கிடங்கு உள்ளது.
இங்கு, 'ஏசி, டிவி, பிரிஜ்' உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை இருப்பு வைத்து, தேவைப்படும் ஷோ ரூம்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கிடங்கில் இருந்த, 4 'ஏசி', 2 பிரிஜ் மாயமானது அண்மையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கிடங்கில் பணியாற்றும் சூப்பர்வைசர் சரவணகுமார், 40, லாரி ஓட்டுநர் சீனிவாசன், 31, ஆகியோர், கிடங்கில் இருந்து அவற்றை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, கிடங்கு நிர்வாகத்தினர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், குன்றத்துார் அருகே பெரியபணிச்சேரி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சீனிவாசனை கைது செய்து அவரிடம் இருந்த 4 ஏசி, 2 பிரிஜை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ஆவடியை சேர்ந்த சூப்பர்வைசர் சரவணகுமாரை, போலீசார் தேடி வருகின்றனர்.