/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிரைவர் மாயம் மின் நிலையம் முற்றுகை
/
டிரைவர் மாயம் மின் நிலையம் முற்றுகை
ADDED : அக் 09, 2024 12:13 AM

பொன்னேரி: சோழவரம் அடுத்த ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 45; லாரி ஓட்டுநர். கடந்த 1ம் தேதி, வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் நிலையத்தில், சாம்பல் கழிவுகளை ஏற்றி வருவதற்காக லாரியுடன் சென்றார். அப்போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த அனல் மின் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சாம்பல் கால்வாயில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஜெகநாதபுரம் ஊராட்சி தலைவர் மணிகண்டன் தலைமையிலான கிராம மக்கள், 30 பேர் நேற்று வடசென்னை அனல்மின் நிலைய இரண்டாம் நிலைய நுழைவாயில் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர், ''நாகராஜை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்,'' என, உறுதியளித்தார்.