/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ரோடு ரோலர்' ஏறி டிரைவர் உயிரிழப்பு
/
'ரோடு ரோலர்' ஏறி டிரைவர் உயிரிழப்பு
ADDED : ஜன 07, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்,திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, கரிக்கலவாக்கம் கிராமத்தில் தனியார் கம்பெனியில், கட்டுமான பணி நடந்து வருகிறது.
அங்கு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த சக்தி, 37, என்பவர், நேற்று ரோடு ரோலர் வாகனத்தை இயக்கும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் வாகனத்தின் பின்பக்க டயர் சக்தி மீது ஏறியதில் பலத்த காயம் அடைந்தார்.
அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.