ADDED : செப் 27, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி,பூந்தமல்லி, கங்கை அம்மன் கோவில், வாணிய தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 59; ஆட்டோ ஓட்டுனர்.
நேற்று முன்தினம், அவரது வீட்டு மரத்தில் ஏறி, இரும்பு தொரட்டுக் கொம்பை கொண்டு, மாங்காயை பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, தொரட்டு கொம்பு, அவ்வழியாக செல்லும் மின் வடத்தில் பட்டதால், அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து, கணேசன் துாக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே இறந்தவரின் உடலை, பூந்தமல்லி போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றன.

