/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : செப் 05, 2025 02:15 AM
சென்னை :மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளி வேன் டிரைவருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, விசுர் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ், 35. இவர், சென்னையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன் ஓட்டி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு, இவரது வேனில் சென்ற மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் படி, ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பத்மா, சத்தியராஜ் மீதான குற்றச்சாட்டு, அரசு தரப்பால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதுஎன கூறி, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.