/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து டிரைவர் காயம்; பயணியர் தப்பினர்
/
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து டிரைவர் காயம்; பயணியர் தப்பினர்
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து டிரைவர் காயம்; பயணியர் தப்பினர்
லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து டிரைவர் காயம்; பயணியர் தப்பினர்
ADDED : ஜூன் 13, 2025 12:25 AM

மாதவரம், மாதவரம் ரவுண்டானா பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்பதி செல்லக்கூடிய ஆந்திரா மாநில அரசு பேருந்து, நேற்று காலை 11:00 மணியளவில் புறப்பட்டது.
பேருந்தை டிரைவர் மதுசூதனராவ் ஓட்டிச் சென்றார்; 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர்.
மாதவரத்திலிருந்து செங்குன்றம் செல்லும் கொல்கட்டா நெடுஞ்சாலையில், புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, சாலை ஓரமாக குவிந்துள்ள மணல், குப்பைகளை அகற்றும் சென்னை மாநகராட்சி லாரி ஒன்று, துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தது.
அந்தவழியே வந்த திருப்பதி பேருந்து, எதிர்பாராவிதமாக லாரி மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பயணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பயணியர் எந்த பாதிப்புமின்றி தப்பினர்.
மாதவரம் போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், பேருந்து டிரைவரின் கவனக்குறைவால் விபத்து நடந்ததை அறிந்தனர். இதுகுறித்த,வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
**