/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் பலி
/
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் பலி
ADDED : அக் 09, 2024 12:17 AM
ஆவடி,
ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் அன்பழகன், 35, லாரி ஓட்டுனர். இவர், நேற்று மதியம், வீடு கட்டுமான பணிக்காக, 'டிப்பர்' லாரியில் சவுடு மண் ஏற்றிக்கொண்டு, ஆவடி அடுத்த சேக்காடு, வி.ஜி.என் குடியிருப்பு அருகே லோடு இறக்க சென்றார்.
சவுடு மண்ணை கொட்ட, 'ஹைட்ராலிக்' வாயிலாக மேலே உயர்த்தும்போது, அங்கிருந்த மின்சார வடத்தில் லாரி உரசியது. லாரியில் சாய்ந்து நின்றிருந்த அன்பழகன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து உள்ளார்.
அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, ஆவடி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.