ADDED : டிச 11, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் ஒண்டி காலனி, அக்னீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய், 29; லோடு ஆட்டோ ஓட்டுனர். கடந்த 3ம் தேதி இரவு, தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தினார்.
அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், பெரிய கல்லை துாக்கி விஜயின் தலையில் போட்டு, கொலை செய்து தலைமறைவாகினர்.
குன்றத்துார் போலீசாரின் விசாரணையில், விஜயை கொன்றது நசரத்பேட்டையைச் சேர்ந்த பிரவீண், 29, குன்றத்துாரைச் சேர்ந்த சந்துரு, 24, என்பது தெரிய வந்தது. இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

