/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் 'டோல்கேட்' தடுப்புகளை உடைத்து அடாவடி செய்த கார் ஓட்டுநர் 'சர்வர்' பிரச்னையால் ஏற்பட்ட விபரீதம்

ADDED : அக் 01, 2025 03:09 PM
சென்னை:
சென்னை விமான நிலையத்தில், வாகனங்களை அனுமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'டோல்கேட்'டில் 'சர்வர்' பிரச்னை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், தடுப்புகளை உடைத்து சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள 'பார்க்கிங்' பகுதிக்கு, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை அனுமதிக்க, 'டோல்கேட்' முறை செயல்பாட்டில் உள்ளது. நேர அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, வாகனங்களுக்கான தொகை வசூலிக்கப்படும்.
நேற்று முன்தினம் இரவு, கார் ஓட்டுநர் ஒருவர், விமான நிலை டோல்கேட்டில், கட்டணத்தை செலுத்த காத்திருந்தார்.
அங்குள்ள ஊழியர்கள், 'சர்வர் பிரச்னையாக இருக்கிறது காத்திருங்கள்' எனக்கூறி, 15 நிமிடங்களுக்கும் மேலாக அலைக்கழித்தனர்.
கார் அங்கேயே நின்றதால், அடுத்தடுத்து வந்த கார்களும் வரிசை கட்டின; 'ஹார்ன்' சத்தம் இடைவிடாமல் அலறியது. கார் ஓட்டுநர், டோல் நிர்வகிக்கும் ஊழியர்களிடம் சத்தமிட்டார்.
பதிலுக்கு ஊழியர்களும் சண்டையிட்டனர். இதனால், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த கார் ஓட்டுநர், டோல்கேட் தடுப்புகளை உடைத்து, காருடன் வெளியில் செல்ல முயன்றார். அவரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். சம்பவம் குறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
ஆனால் போலீசார், இதை பெரிதாக கண்டுகொள்ளாமல், நீண்ட நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் சமரசம் பேசியதை அடுத்து, 3,500 ரூபாய் அபராதம் செலுத்திய பின் அந்த ஓட்டுநர், காருடன் புறப்பட்டார்.