/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தி முடிந்து சோதனைக்கு தயார்
/
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தி முடிந்து சோதனைக்கு தயார்
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தி முடிந்து சோதனைக்கு தயார்
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தி முடிந்து சோதனைக்கு தயார்
ADDED : செப் 23, 2024 02:39 AM

சென்னை:சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திற்கான, ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் உற்பத்தி நிறைவடைந்து உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில், மூன்று பெட்டிகளுடன் கூடிய, ஓட்டுனர் இல்லாத 36 ரயில்களை இயக்கும் திட்டம், 1,215 கோடி ரூபாய் மதிப்பில் உருவானது.
இதற்கு, அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி, ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்குவது, குறைபாடுகளை சரி செய்வது உள்ளிட்ட பொறுப்புகளை, அந்நிறுவனம் ஏற்றுள்ளது.
இந்நிறுவனம் முதலில், ஒரு ரயிலின் பெட்டிகளை தயாரிக்கும் பணியை, கடந்த பிப்., 8ம் தேதி துவங்கியது.
பெட்டி தயாரிப்பு பணிகளை முடிந்து, அதில் பல்வேறு கருவிகளை பொருத்தும் பணிகள் நடந்தன. தற்போது, அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ள ஒப்பந்த நிறுவனம், முதல் ஆளில்லா ரயிலை, சோதனை தடத்திற்கு நேற்று அனுப்பியது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலர் ஹர் சகாய் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன், அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அனில்குமார் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ரயில், உற்பத்தியாளர் வளாகத்தில் அனைத்து நிலையான சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும். பின், பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனைக்கு அனுப்பி, அங்கிருந்து மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தில் பங்கேற்கும்.
அதில் வெற்றியடைந்து சட்டப்படியான ஒப்புதலைப் பெற்று, பயணியர் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.