ADDED : டிச 08, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு: வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் அன்பு, 49; லாரி ஓட்டுனர். இவரது லாரி, கடந்த 6ம் தேதி காலை, மூலக்கொத்தளம், கருவாட்டு மண்டி அருகே பழுதாகி நின்றது. இதையடுத்து, சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, 'பிரேக் ஆயில்' வாங்க, பேசின்பாலம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர், அன்பு எதிரே பைக்கை நிறுத்தி, அவரையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவித தயக்கத்துடன் அந்த நபரை கடந்து அன்பு சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு வாலிபர், அன்புவின் பாக்கெட்டில் இருந்த 30,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்தார். அன்பு சுதாரிப்பதற்குள், இருவரும் பைக்கில் ஏறி தப்பினர்.
இது குறித்த, புகாரையடுத்து, பேசின்பாலம் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.