/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியிடம் 'சில்மிஷம்' டிரைவிங் பயிற்சியாளர் கைது
/
மாணவியிடம் 'சில்மிஷம்' டிரைவிங் பயிற்சியாளர் கைது
ADDED : டிச 21, 2024 12:21 AM
அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி, அப்பகுதியில் ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி மையத்தில், கார் ஓட்டி பழகுகிறார். மாணவிக்கு, பயிற்சியாளர் சித்திரைசெல்வம், 37, என்பவர், கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.
பயிற்சி அளிப்பதுபோல், மாணவியிடம் சித்திரைசெல்வம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தந்தை புகாரின்படி, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்ததில், திருவேற்காடைச் சேர்ந்த பயிற்சியாளர் சித்திரைசெல்வம், ஓராண்டாக பயிற்சி பள்ளியில் பணிபுரிவதும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, சித்திரைசெல்வம் மீது, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

