ADDED : ஏப் 01, 2026 11:15 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் ஏப், 3, 4 ஆகிய இரண்டு நாட்கள், ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
சென்னைக்கு வரும் ஏப், 3, 4ம் தேதிகளில் வி.வி.ஐ.பி., வருகை தரவுள்ளதால் பாதுகாப்பு கருதி, மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் மட்டுமின்றி, அவர்கள் பயணிக்கும் வழித்தடங்கள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இடங்களில், ட்ரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள், பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே மைக்ரோ லைட் ஏர் கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலுான்கள் போன்றவற்றை பறக்கவிட, மார்ச் 24 முதல் மே, 22ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது
