/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்றும் 17ம் தேதியும் 'டிரோன்' பறக்க தடை
/
இன்றும் 17ம் தேதியும் 'டிரோன்' பறக்க தடை
ADDED : ஜூன் 15, 2025 12:23 AM
சென்னை, இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்து, புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார்.
மீண்டும் 17ம் தேதி புதுச்சேரியில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.
இதனால் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட, சென்னை விமான நிலையம், ராஜ்பவன் மற்றும் வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்கும் வழித்தடங்கள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே அந்த பகுதியில், இன்றும் 17ம் தேதியும் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மே 28 முதல் ஜூலை 17ம் தேதி வரை ஹாட் ஏர் பலுான்கள், ரிமோட் வாயிலாக இயக்கப்படும் மைக்ரோலைட் ஏர் கிராப்ட், டிரோன்கள் பறக்க தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.