/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ்காரருக்கு 'பளார்' போதை வாலிபர் கைது
/
போலீஸ்காரருக்கு 'பளார்' போதை வாலிபர் கைது
ADDED : ஜூன் 13, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, காசிமேடு மீன்பிடித்துறைமுகம் பைபர் படகுகள் கட்டும் வார்ப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, நான்கு வாலிபர்கள் மது அருந்தி, ரகளையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்த காசிமேடு மீன்பிடித்துறைமுக போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நான்கு வாலிபர்களையும் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆத்திரமடைந்த காசிமேடு, பவர் குப்பத்தைச் சேர்ந்த அஜய், 20, என்பவர், விசாரணையில் ஈடுபட்ட போலீஸ்காரர் சந்தோஷ் என்பவரை, தகாத வார்த்தைகளில் பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.