/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை தாக்கிய போதை நபர்கள் கைது
/
வாலிபரை தாக்கிய போதை நபர்கள் கைது
ADDED : ஜூலை 20, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி:வீட்டின் அருகே நின்ற வாலிபரை தாக்கிய போதை நபர்களை, போலீசார் கைது செய்தனர்.
கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன், 18. நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நின்ற போது, போதையில் வந்த இரண்டு பேர், அவருடன் தகராறு செய்தனர்.
வாக்குவாதம் அதிகரித்த நிலையில், இரண்டு பேரும் சேர்ந்து, உருட்டுக்கட்டையால் அருண்பாண்டியனை சரமாரியாக தாக்கினர். பலத்த காயமடைந்த அருண்பாண்டியன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின்படி, கிண்டி போலீசார் விசாரித்து, அருண்குமாரை தாக்கிய ஆலந்துாரை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 20, கீர்த்திகுமார், 20, ஆகிய இரண்டு பேரையும், நேற்று கைது செய்தனர்.