/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபருக்கு கத்திக்குத்து போதை நபர்கள் சிக்கினர்
/
வாலிபருக்கு கத்திக்குத்து போதை நபர்கள் சிக்கினர்
ADDED : ஆக 13, 2025 05:31 AM
செம்மஞ்சேரி : போதையில், வாலிபரை கத்தியால் குத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
செம்மஞ்சேரி, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன், 30. நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆர்., குமரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே வழியாக போதையில் வந்த மூன்று பேரில் ஒருவர், புருஷோத்தமனை இடித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், அருண் என்ற நபர், கத்தியால் புருஷோத்தமனை சரமாரியாக குத்தினார். பலத்த காயத்துடன், அரசு பொது மருத்துவமனையில் புருஷோத்தமன் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்த அருண், 20, ஸ்ரீதர், 26, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.