/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் வாரிய ஊழியர்களிடம் ரகளை செய்த போதை ஆசாமிகள்
/
மின் வாரிய ஊழியர்களிடம் ரகளை செய்த போதை ஆசாமிகள்
ADDED : ஏப் 22, 2025 12:57 AM
கே.கே., நகர், கே.கே., நகர் ஏ.வி.எம்.மெய்யப்பன் சாலையில், பூமிக்கு கீழ் செல்லும் மின்சார கேபிள் நேற்று முன்தினம் மாலை பழுதடைந்தது.
இதையடுத்து, ஏழு மின் வாரிய ஊழியர்கள், அப்பகுதியில் பள்ளம் தோண்டி, பழுதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மது போதையில் வந்த மூன்று பேர், மின் வாரிய ஊழியர்களிடம் வீண் தகராறு செய்தனர்.
தகவல் அறிந்து வந்த கே.கே., நகர் போலீசார், ரகளையில் ஈடுபட்ட கே.கே., நகர், கன்னிகாபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த, 136வது வார்டு தி.மு.க., வட்ட பொருளாளர் கார்த்திக், 35, கே.கே., நகர் விஜயராகவபுரத்தை சேர்ந்த விஜய், 40, மற்றும் சுரேஷ், 39, ஆகியோரை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், மூவரும் மது போதையில் இருந்ததால், நேற்று விசாரணைக்கு வரும்படி எழுதி வாங்கிவிட்டு, அனுப்பி வைத்தனர்.