ADDED : ஜூன் 21, 2025 11:56 PM

அ நிறம் | அளவு
சென்னை, சென்னை சுங்கதுறையின் விமான நிலைய பிரிவு சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மீனம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் நேற்று நடந்தது.
போதைப் பொருள் பயன்பாட்டின் அபாயங்களைப் பற்றியும், அதன் பிடியில் மாணவர்கள் சிக்கிவிடக்கூடாது எனவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சென்னை அவுட்டர் ஜி.எஸ்.டி.,யின் இணை கமிஷனர் வெங்கடேஷ்பாபு, விமான நிலைய சுங்கத்துறை இணை கமிஷனர் வினாயக், உதவி கமிஷனர் ஆனந்தி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
