/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையால் தகராறு: நண்பரை கொன்று வாலிபர் 'எஸ்கேப்'
/
போதையால் தகராறு: நண்பரை கொன்று வாலிபர் 'எஸ்கேப்'
ADDED : ஏப் 01, 2025 01:04 AM

பெரவள்ளூர், பெரம்பூர் அருகே அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு, 26. இவரும், நண்பரான பெங்கால் என்கிற பாலு என்பவரும், நேற்று மாலை எஸ்.ஆர்.பி.கோவில் தெரு பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் தனித்தனியே சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தோர் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில், சந்துரு நண்பர் சந்தோஷ் என்பவருடன், வீட்டருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த பாலு, 'சிகரெட் பிடிக்கலாம் வா' எனக்கூறி, சந்துருவை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பூங்கா அருகே அழைத்துச் சென்றார்.
பூங்கா வாசலில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை வெட்டி தப்பினார். இதில் சந்துருவின் இடது பக்க மார்பு, முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டு விழுந்தது. அங்கிருந்தோர் சந்துருவை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது.
பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பாலுவை தேடி வருகின்றனர்.