/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை கடத்தல் கும்பலின் ரூ.2 கோடி சொத்து முடக்கம்
/
போதை கடத்தல் கும்பலின் ரூ.2 கோடி சொத்து முடக்கம்
ADDED : ஜூன் 11, 2025 01:12 AM
சென்னை,
செங்குன்றம் பகுதியில், 2024 ஜூன் மாதம், 1.47 கிலோ மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த ஏழு பேரை, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 1.47 கிலோ மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 1.29 கோடி ரூபாய், 3,000 அமெரிக்க டாலர், 5,030 இலங்கை பணம் உள்ளிட்ட ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, போதை பொருள் கடத்தல் வாயிலாக சொத்துகளை சேர்த்த நிசாரூதீன், ரபியா சஹானா ஆகியோரின், 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். அதன்படி, நான்கு விவசாய நிலங்கள், 11 குடியிருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும், போதை பொருள் விற்பனை வாயிலாக சம்பாதிக்கப்பட்டது. இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவோரின் சொத்துகள் முக்கப்படும் என, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.