sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 'போதை' மாணவர் கைது

/

 போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 'போதை' மாணவர் கைது

 போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 'போதை' மாணவர் கைது

 போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய 'போதை' மாணவர் கைது


ADDED : மார் 02, 2026 05:24 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா சாலையில், சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கிய போதையில் இருந்த கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

அண்ணா சாலை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் ராஜன், 56. இவர், நேற்று முன்தினம் இரவு, சக போலீசாருடன் அண்ணாசாலையில் வாகன சோதனை யில் ஈடுபட்டார்.

அப்போது, அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அதில், வாலிபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவர், எழும்பூர் பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத், 22, என்பதும், கல்லுாரி மாணவர் என்பதும் தெரியவந்தது.

விசாரணையின் போது முரண்டு பிடித்த வாலிபர், காவல் நிலைய வரவேற்பு பகுதியில் அமர்ந்திருந்த சிறப்பு எஸ்.ஐ., ராஜன் மீது, அங்கு கிடந்த கல்லால் தாக்கினார்.

இதனால், சிறப்பு எஸ்.ஐ.,யின் கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது. சக போலீசார் அவரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கி தப்பியோட முயன்ற கல்லுாரி மாணவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us