/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.15 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு
/
ரூ.15 கோடி மதிப்புள்ள போதை பொருள் அழிப்பு
ADDED : ஆக 14, 2025 11:50 PM
சென்னை :சென்னையில், 959 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 15.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக, போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, 959 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அவ்வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 15.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள், அமலாக்கப் பணியக இயக்குநர், கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தலைமையில், செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில், சட்டரீதியாக போதை பொருட்களை எரிக்கும் ஆலையில், நேற்று அழிக்கப்பட்டன.
இந்த ஆண்டில் இதுவரை, 1,314 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 21,731 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் அழித்துள்ளனர்.