/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.200க்கு வந்தது முருங்கைக்காய்
/
ரூ.200க்கு வந்தது முருங்கைக்காய்
ADDED : டிச 15, 2025 04:56 AM
சென்னை: சில வாரங்களாக உச்சம் தொட்ட முருங்கைக்காய் விலை, வரத்து அதிகரிப்பால் சரிவை சந்திக்க துவங்கி கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையானது.
தேனி, திண்டுக்கல், மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முருங்கைக்காய் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது, இம்மாவட்டங்களில் முருங்கைக்காய் விளைச்சல் முற்றிலும் குறைந்துள்ளது. மேலும், வெளிமாநில வரத்தின்றி கடந்த சில வாரங்களில் ஒரு கிலோ முருங்கைக்காய் 450 ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
ஒரு முருங்கைக்காய், 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது.
இந்த நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரத்து உள்ளதால், கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் 160 - 200 ரூபாய்க்கு விற்பனையானது. வெளிசந்தைகளில் 50 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தனர்.
ஜனவரி மாதம் முதல், முருங்கைக்காய் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

