மது போதையில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு ஓட்டுநர் பலி
மது போதையில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு ஓட்டுநர் பலி
ADDED : ஏப் 11, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம், அகத்தீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவநாதன், 60; ஆட்டோ ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு, இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின், இரண்டாவது தளம் பால்கனியில் நின்று கொண்டிருந்தார்.
மது போதையில் இருந்த அவர், கால் இடறி அகத்தீஸ்வரர் கோவில் குளத்தின் சுற்றுச்சுவரில் விழுந்தார். அவரது தலையில் அடிபட்டு, கீழே உருண்டு குளத்து நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.
