/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் ஏரிக்குள் விழுந்தவர் பலி
/
போதையில் ஏரிக்குள் விழுந்தவர் பலி
ADDED : செப் 24, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொரட்டூர்: கொரட்டூர் ஏரி நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டோர், ஏரிக்குள் ஆண் சடலம் மிதப்பதாக, கொரட்டூர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த கொரட்டூர் போலீசார், ஏரியின் கரையோரம் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு, பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், ஏரிக்குள் கிடந்தது, கொரட்டூர், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த வாசு, 43, என்பவரின் உடல் என, தெரிந்தது. கடந்த 21ம் தேதி மாலை, வீட்டி லிருந்து வெளியேறிய வாசு, அதீத மது போதையில் ஏரிக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிந்தது.