ADDED : ஆக 04, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பியம்:மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் யுவனேஸ்வரன், 22. இவர் மீது, 12 குற்ற வழக்குகள் உள்ளன.
இவர், இரவு நேரங்களில் மது போதையில், பகுதிமக்களை அச்சுறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்த செம்பியம் போலீசார், யுவனேஸ்வரனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.