/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவன், மனைவி தகராறு போதையில் டிரைவர் தற்கொலை
/
கணவன், மனைவி தகராறு போதையில் டிரைவர் தற்கொலை
ADDED : பிப் 04, 2024 05:34 AM
புளியந்தோப்பு: ஓட்டேரி, கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் புதிய காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 47 ; கார் ஓட்டுனர்.
அவரது மனைவி கவிதா, 31. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மது பழக்கத்திற்கு அடிமையான பிரேம்குமார், பிப். 1 ம் தேதி மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளார்.
'தன்னை அடித்தால் போலீசில் புகார் அளிப்பேன்' என கவிதா கூறியுள்ளார்.
இதனால், பயந்து போன பிரேம்குமார், பெண்கள் அணியும் 'லெக்கின்ஸ்' உடையில் கழுத்தை இறுக்கி மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.
புளியந்தோப்பு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.