/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.டி.கே., சாலையில் பள்ளம் போக்குவரத்து மாற்றம்
/
டி.டி.கே., சாலையில் பள்ளம் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 20, 2024 12:29 AM

சென்னை, டி.டி.கே., சாலை - அம்புஜம்மாள் தெரு சந்திப்பில், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால், போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை டி.டி.கே., சாலையில் இருந்து கதீட்ரல்சாலை அல்லது ஆர்.கே., சாலை செல்லும் வாகனங்கள், ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடது புறம், முரேஸ் கேட் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளன.
பின், சேஷாத்ரி சாலை -கஸ்துாரி ரங்கன் சாலை - கதீட்ரல் சாலை வழியாக ஆர்.கே., சாலை செல்லலாம்.
டி.டி.கே., சாலை - அம்புஜம்பாள் தெரு சந்திப்பில் விழுந்த பள்ளத்தை சீரமைக்கும் பணியில், குடிநீர் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி, ஓரிரு வாரம் நடக்கும் என்பதால், அதுவரை போக்குவரத்து மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.