தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'டம்மி' ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்

 'டம்மி' ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்

 'டம்மி' ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்


ADDED : ஏப் 10, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரும்பாக்கம்: ஒரத்தநாடு தி.மு.க., வேட்பாளர் வைத்தியலிங்கம் புகைப்படம் பதித்த 'விசிட்டிங்' அட்டை மற்றும் 100 'டம்மி' மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரும்பாக்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட அரும்பாக்கம், மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு, தேர்தல் பறக்கும் படை குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கோயம்பேடு நோக்கி, பெரிய பாசல்களுடன் சென்ற லோடு ஆட்டோவை நிறுத்தி சோதித்தனர். அதில், பொத்தானுடன், 'தெர்மாகோல்' அட்டைகளால் செய்யப்பட்ட 100 'டம்மி' இ.வி.எம்., எனும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருந்தன.

அத்துடன், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி தி.மு.க., வேட்பாளருமான வைத்தியலிங்கம் புகைப்படம் பதித்த 20,600 எண்ணிக்கையில் விசிட்டிங் கார்டுகள் மற்றும் பெண்கள் நெற்றியில் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் இருந்தன. உரிய ஆவணம் இல்லாததால், இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒரு அறையில் அடுக்கி பூட்டினர்.

புதுக்கோட்டைக்கு பார்சலை அனுப்புவதற்காக, சென்னை வடபழனியில் இருந்து, கோயம்பேடில் உள்ள டெலிவரி நிறுவனத்திற்கு எடுத்து சென்றது தெரிந்தது. ஆட்டோவில் இருந்த இருவரிடம் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us