ADDED : மார் 11, 2024 01:41 AM
வடக்கு கடற்கரை:பாரிமுனை, பர்மா பஜார் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ -- சிகரெட் விற்கப்படுவதாக, வடக்கு கடற்கரை போலீசாருக்கு நேற்று, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸ் கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்கு உத்தரவின்படி, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரேயா குப்தா தலைமையில் தனிப்படையினர் நேற்று, பர்மா பஜாரில் உள்ள கடைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதில், சேத்துப்பட்டு, நவுரோஜ் தெருவைச் சேர்ந்த முகமது ஆசிக், 31, என்பவர் கடையில் இ - சிகரெட்டுகளை பதுக்கி, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
அவரது தகவலின்படி, கூட்டாளிகளான மண்ணடி அப்துல்லா, 32, சையத் அபுதாஹிர், 36, யாஸ்மின் ராஜா, 33, வியாசர்பாடி அப்துல் கரீம், 25, மற்றும் பட்டாளம் அப்துல், 20, ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.
மலேஷியா, இந்தோனேஷியா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இ - சிகரெட் இறக்குமதி செய்தது தெரிந்தது.
இவர்களிடமிருந்து, 30 லட்சம் மதிப்புள்ள 1,312 இ - சிகரெட்டுகளை, வடக்கு கடற்கரை போலீசாரால் பறிமுதல் செய்தனர். மேலும், ஆறு பேரையும் கைது செய்து, தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
