ADDED : ஜன 01, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகிநகர்,கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர் குடியிருப்புகளில், பெரும்பாலானோர் தினக்கூலி வேலை செய்கின்றனர். இவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, கல்வி, தனித்திறன் பயிற்சி, சுய வேலைவாய்ப்பு வழங்கவும், அரசின் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு துவக்கி வைத்தார்.
கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் சத்யசாய் மருத்துவ கல்லுாரி இணைந்து, கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றன.
இப்பணி, நேற்று முன்தினம் துவங்கியது. வாரந்தோறும், 250 கல்லுாரி மாணவ - மாணவியர் வீடு வீடாக சென்று கணக்கெடுக்க உள்ளனர். இப்பணி, நான்கு மாதங்கள் நடைபெறும்.