/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆர்., விரிவுக்காக அகற்றப்படும் மரங்கள் சோழிங்கநல்லுார் ஏரிக்கரையில் நட முடிவு

ADDED : ஜன 09, 2024 12:33 AM

சென்னை,சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. நான்கு வழி சாலையான இது, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம், ஆறு வழியாக மாற்றப்பட்டு வருகிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அக்கரை பகுதியில் விரிவாக்கம் பணி நடக்கிறது.
இதில், விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த உயர் அழுத்த மின் கம்பங்கள், சாலையோரம் மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், நீலாங்கரை முதல் அக்கரை வரை, 5 முதல் 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் நிற்கின்றன.
சாலை விரிவாக்கத்திற்காக இந்த மரங்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மரங்களை வெட்டி அகற்றாமல், மாற்று இடத்தில் நட வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, முதற்கட்டமாக வாகை, அசோகா, பாதாம், உதயம் உள்ளிட்ட 97 மரங்களின் கிளைகளை வெட்டி, வேரோடு எடுத்து, சோழிங்கநல்லுார், ராமன்தாங்கல் ஏரிக்கரையில் நட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, மரக்கிளைகளை வெட்டி, வெயிலில் வாடாமல் இருக்க, மூடி பாதுகாக்கப்படுகிறது.
ஏரிக்கரையில் பள்ளம் எடுத்து தயாராக வைத்த பின், ஒவ்வொரு மரமாக துாக்கி சென்று நடப்படுகிறது.
இதற்கான பணிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடக்கின்றன.