/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்வித்துறை மாநில வாலிபால் போட்டி சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளி தகுதி
/
கல்வித்துறை மாநில வாலிபால் போட்டி சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளி தகுதி
கல்வித்துறை மாநில வாலிபால் போட்டி சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளி தகுதி
கல்வித்துறை மாநில வாலிபால் போட்டி சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளி தகுதி
ADDED : டிச 04, 2024 12:23 AM

சென்னை, பள்ளிக் கல்வித் துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவில் நடந்த வாலிபால் போட்டியில் முதலிடத்தை பிடித்த சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், தென்சென்னை மற்றும் வடசென்னை மாவட்ட அளவில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. அதில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தன.
அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையேயான வருவாய் மாவட்ட அளவில் போட்டிகள், சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடந்தது.
இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவருக்கான அரையிறுதி போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியும், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியும் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 25 -- 23, 25 -- 22 என்ற கணக்கில், செயின்ட் பீட்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அதைத்தொடர்ந்து நடந்த இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் மற்றும் ஆலந்துார் மான்போர்ட் பள்ளி அணிகள் எதிர்கொண்டன. அதில், 19- - 25, 25 -- 21, 25 -- 22 என்ற கணக்கில், செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
இந்த வெற்றியால், மதுரையில் 2025 ஜனவரியில் நடக்கவுள்ள மாநில போட்டியில் பங்கேற்கவும், செயின்ட் பீட்ஸ் பள்ளி தகுதி பெற்றுள்ளது.