/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லிட்டில் ப்ளவர் பள்ளியில் வரும் 13ல் கல்வி கருத்தரங்கு
/
லிட்டில் ப்ளவர் பள்ளியில் வரும் 13ல் கல்வி கருத்தரங்கு
லிட்டில் ப்ளவர் பள்ளியில் வரும் 13ல் கல்வி கருத்தரங்கு
லிட்டில் ப்ளவர் பள்ளியில் வரும் 13ல் கல்வி கருத்தரங்கு
ADDED : செப் 08, 2025 06:12 AM
சென்னை: லிட்டில் ப்ளவர் கல்விக் குழுமம் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட சுயநிதி பள்ளிகளின் சங்கம் சார்பில், 'கல்வி கருத்தரங்கம் - 2025' வரும் 13ம் தேதி, சென்னையில் நடக்க உள்ளது.
குன்றத்துார் லிட்டில் ப்ளவர் பள்ளி வளாகத்தில் நடக்கும் இக்கருத்தரங்கில், பள்ளியின் நிறுவனர் ஜான் சேவியர் தங்கராஜ் தலைமை வகிக்க உள்ளார்.
கருத்தரங்கின் முதல் நிகழ்வாக, 'பள்ளிக்கல்வி - ஓர் புதிய பார்வை' என்ற தலைப்பில், குழு விவாதம் நடக்க உள்ளது.
இதில், வேல்ஸ் குழும கல்வி இயக்குநர் மீனாட்சி ரமேஷ், வாகிஷா வித்யாலயா பள்ளி முதல்வர் சங்கீதா, குழந்தைகள் நல மருத்துவர் அஷ்வின் சங்கமேஷ் பழனிசாமி, ஸ்ரீ சங்கரா குளோபல் அகாடமி முதல்வர் ஜோத்ஸ்னா மகேஷ், தனியார் கல்வி அமைப்பின் நிறுவனர் கல்பனா உள்ளிட்டோர் விவாதிக்க உள்ளனர்.
கருத்தரங்கின் இரண்டாம் நிகழ்வாக, நவீன கல்வியியல் கருத்துகளை மையமாக கொண்டு, 'சிந்தனை பரிமாற்றம்' நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதை லிட்டில் ப்ளவர் ஜுபிலி இன்டர்நேஷனல் அகாடமி முதல்வர் ரூபியா எட்வின் தொகுத்து வழங்க உள்ளார்.
கருத்தரங்கில் ஒருங்கிணைந்த மாவட்ட சுயநிதி பள்ளிகளின் சங்கத்தின் தலைவர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன், செயலர் எஸ்.பிரேம் சங்கர், பொருளாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கல்வி யாளர்கள் பங்கேற்க உள்ளனர்.