/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமை ஆசிரியரிடம் கேட்டு பள்ளிகளில் முட்டை வினியோகம்
/
தலைமை ஆசிரியரிடம் கேட்டு பள்ளிகளில் முட்டை வினியோகம்
தலைமை ஆசிரியரிடம் கேட்டு பள்ளிகளில் முட்டை வினியோகம்
தலைமை ஆசிரியரிடம் கேட்டு பள்ளிகளில் முட்டை வினியோகம்
ADDED : அக் 10, 2025 11:54 PM
சென்னை :பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் முட்டை குறைத்து வழங்கப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து, மாணவர்களின் வருகை குறித்து தலைமை ஆசிரியரிடம் கடிதம் பெற்று, அதற்கேற்ற எண்ணிக்கையில் முட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 103 அரசு பள்ளிகளில், மதிய உணவில் வழங்கப்படும் முட்டையை, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தராமல் குறைத்து வழங்கி, முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைடுத்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாரத்திற்கு ஒரு முறை வருகை தரும் மாணவர்களுக்கு ஏற்ப, தலைமை ஆசிரியர் ஒப்புதல் கடிதம் அடிப்படையில் முட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அடுத்த வாரத்திற்கான முட்டை தேவைப்பட்டியல் படிவத்தை பூர்த்தி செய்து, தலைமை ஆசிரியர் மற்றும் அமைப்பாளரின் கையொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை ஒவ்வொரு வாரமும் தொடரும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.