தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முட்டை விலை 545 காசாக நிர்ணயம்

முட்டை விலை 545 காசாக நிர்ணயம்

முட்டை விலை 545 காசாக நிர்ணயம்


ADDED : மே 15, 2025 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 540 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:

சென்னை, 600, ஐதராபாத், 500, விஜயவாடா, 500, பர்வாலா, 451, மும்பை, 560, மைசூரு, 578, பெங்களூரு, 565, கோல்கட்டா, 540, டில்லி, 475 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 105 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us