ADDED : பிப் 03, 2024 12:53 AM
அ நிறம் | அளவு
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடந்து வருவதால், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில், தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்கு அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை, அனைத்து பயணியரும் வரும் 5ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
