/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஏர்போர்டில் எட்டு விமானங்கள் ரத்து
/
சென்னை ஏர்போர்டில் எட்டு விமானங்கள் ரத்து
ADDED : மே 16, 2025 11:57 PM
சென்னை :சென்னை விமான நிலையத்தில் மதுரை, ஷிவ்முகா, துாத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்லும், எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து திருச்சிக்கு காலை 11:15 மணி, துாத்துக்குடிக்கு பகல் 12:00 மணி, மதியம் 2:10 மணிக்கு, கர்நாடக மாநிலம், சிவமுகா செல்லும் விமானம், மதியம் 2:25 மணிக்கு, மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், கர்நாடக மாநிலம், சிவமுகாவிலிருந்து சென்னை வரும் விமானம், திருச்சி, துாத்துக்குடி மற்றும் மதுரையில் இருந்து வரவேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
நிர்வாக காரணங்களுக்காக விமான சேவையை ரத்து செய்யப்பட்டதாகவும், பயணியருக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டு விட்டதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
★★★