/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது பெற எட்டு பேர் தேர்வு
/
அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது பெற எட்டு பேர் தேர்வு
அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது பெற எட்டு பேர் தேர்வு
அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது பெற எட்டு பேர் தேர்வு
ADDED : செப் 19, 2025 12:56 AM
சென்னை, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், நடப்பாண்டிற்கான அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருதுக்கு எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்தாளர்கள் ஜி.குப்புசாமி, அனுராதா கிருஷ்ணசாமி இருவரும் முதல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.
அம்மையத்தின் இயக்குநர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், நடப்பாண்டிற்கான அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருதாளர்கள் தேர்விற்கான, நடுவர் குழுக் கூட்டம் கடந்த 10ம் தேதி நடந்தது.
திறனாய்வாளர் பஞ்சாங்கம், விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம், மொழி பெயர்ப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நடுவர்களாக இருந்து, விருதாளர்களை தேர்வு செய்தனர்.
அதன்படி, முதல் பரிசு, ஜி.குப்புசாமி மற்றும் அனுராதா கிருஷ்ணசாமி இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
குறிஞ்சிவேலன், கயல் ஆகியோர் இரண்டாம் பரிசுக்கும்; தருமி, பத்மஜா நாராயணன், அனுராதா ஆனந்த், இஸ்க்ரா ஆகியோர், மூன்றாம் பரிசுக்கும் தேர்வாகி உள்ளனர்.
முதல் பரிசாக, 2 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக 50,000 ரூபாய்; மூன்றாம் பரிசாக 25,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
விருதுகள் நா.மகாலிங்கம் நினைவு நாளான, அக்., 2ல், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.