ADDED : மே 01, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில், நேற்று மதியம் பயணியர் இருவர் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் காய்ந்த கிளை உடைந்து, பேருந்துக்காக காத்திருந்த முதியவர்கள் மீது விழுந்தது.
காயமடைந்த இரு வரையும் அங்கிருந்தோர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
செம்பியம் போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த தில்லையம்மாள், 80, அயப்பாக்கத்தைச் சேர்ந்த மனோகரன், 60 என்பது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
